பிக் பாஸை நம்பி ஏமாந்து சன் டிவி பக்கம் ஒதுங்கும் நடிகர்!
சின்னத்திரை நடிகர் முகமது அசீம் தற்போது சன் டிவி-யில் வெற்றிகரமாக ஓடி கொண்டிருக்கும் சீரியல் ஒன்றில் புதிதாக இணையவுள்ளார்.
பகல் நிலவு சீரியலில் அர்ஜுன் என்ற பாத்திரத்தில் நடித்து ரசிகர்களை பெரிதும் கவர்ந்தவர் சின்னத்திரை நடிகர் முகமது அசீம் தற்போது சன் டிவி-யில் வெற்றிகரமாக ஓடி கொண்டிருக்கும் சீரியல் ஒன்றில் புதிதாக இணையவுள்ளார்.
பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியிலும் அசீம் பங்கேற்பதாக இருந்தது. ஆனால் ஷிவானியும் அதில் இருந்ததால் அசீம் பங்கேற்பதில் சிக்கல் ஏற்பட்டு பின் அந்த முடிவு கைவிடப்பட்டதாக தெரிகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன் அசீம் தனது மனைவியை விவாகரத்து செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.