வியாழன், 18 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வியாழன், 22 ஏப்ரல் 2021 (17:25 IST)

சன் டிவியில் வரவேற்பைப் பெறாத மாஸ்டர் திரைப்படம்… இன்னமும் விஸ்வாசம்தான் கிங்!

மாஸ்டர் திரைப்படம் சன் தொலைக்காட்சியில் சித்திரை 1 அன்று ஒளிபரப்பான நிலையில் டி ஆர் பியில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.

விஜய் நடித்த மாஸ்டர் திரைப்படம் பொங்கலுக்கு ரிலிஸாகி கொரோனாவால் மூடப்பட்ட தியேட்டர்களுக்கு மறு உயிர் கொடுத்தது. அதன் பின்னர் அமேசான் ப்ரைம் தளத்திலும் வெளியானது. இந்நிலையில் 3 மாதங்களுக்கு பிறகு சன் தொலைக்காட்சியில் கடந்த வாரம் ஒளிபரப்பப் பட்டது.

ஆனால் எதிர்பார்த்த அளவுக்குப் பார்வையாளர்களைக் கவரவில்லை என சொல்லப்படுகிறது. அஜித்தின் விஸ்வாசம் திரைப்படம் மூன்றாவது ஒளிபரப்பில் பெற்ற பார்வையாளர்களைக் கூட மாஸ்டர் முதல் ஒளிபரப்பில் பெறவில்லை என சொல்லப்படுகிறது.