வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : வியாழன், 13 மே 2021 (18:08 IST)

விஜய்டிவிக்கு போட்டியாக சன் டிவி.......நடிகர் விஜய்சேதுபதி தொகுப்பாளர்

நடிகர் விஜய்சேதுபதி விரைவில் ஒரு சமையம் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கவுள்ளதாகத் தகவல் வெளியாகிறது.

விஜய்டிவி,சன் டிவி, டிஸ்கவரி சேனல் முதற்கொண்டு பல்வேறு தொலைக்காட்சிகளில் மக்களைக்கவரும் வகையில் புதுமையான நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது.

அந்தவகையில், குக் வித் கோமாளி நிகழ்ச்சி பலர்து கவனத்தைப் பெற்றது. அதேபோல் சமூகவலைதளமான யூடியூபில் சமையல் நிகழ்ச்சிகளுக்கு தனி ரசிகர்களே உள்ளனர்.

இந்நிலையில், உலகளவில் பிரசித்தி பெற்ற மாஸ்டர் செப் நிகழ்ச்சியை இந்தியாவில் அறிமுகம் செய்யப்படவுள்ளதாம். இதில் தமிழில் விஜய்சேதுபதி இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்கவுள்ளதாகத் தகவல் வெளியாகிறது.

சன் டிவியில் இந்நிகழ்ச்சி ஒளிப்பரப்பாக உள்ளதால் விஜய்சேதுபதியிடம் இதுகுறித்து பேச்சுவார்த்தை நடந்துவருவதாகவும் கூறப்படுகிறது. இந்நிகழ்ச்சி விஜய்டிவியில் குக் வித் கோமளி நிகழ்ச்சிக்குப் போட்டியாக இருக்கும் எனத் தெரிகிறது.