குடி...பார்ட்டின்னு கும்மாளம் அடித்தார்களா அனுஷ்கா, அஞ்சலி? சர்ச்சை கிளப்பும் ஷாக்கிங் புகைப்படம்!
தென்னிந்திய சினிமாவின் பிரபல நடிகையான அனுஷ்கா ஷெட்டி தற்போது இயக்குனர் ஹேமந்த் மதுகர் இயக்கத்தில் உருவாகிவரும் “நிசப்தம்” என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் மாதவன், அஞ்சலி, உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
இதற்கிடையில் நேற்று தனது 38வது பிறந்த நாளை நிசப்தம் படக்குழுவினருடன் அனுஷ்கா கொண்டாடியுள்ளார். அப்போது அஞ்சலியுடன் எடுத்துக்கொண்ட சில புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வந்தது.
இந்நிலையில் அந்த புகைப்படத்தில் ஓரமாக உள்ள ஒரு டேபிளில் மதுவுடன் கூடிய க்ளாஸ் ஒன்று இருப்பதை கண்டு ரசிகர்கள் ஷாக்கடைந்துள்ளனர். பர்த்டே பார்ட்டியில் இருவரும் மது அருந்தினார்களா என அவரது ரசிகர்கள் ஷாக்காகியுள்ளனர்.