வேறொருவருடன் வாட்ஸ் ஆப்பில் பேசிய மனைவியை கொன்ற கணவன் !

utterpradesh
Last Modified சனி, 3 ஆகஸ்ட் 2019 (19:02 IST)
உத்தரபிரதேச மாநிலம்  ஆக்ராவில் வசித்து வந்தவர் சோனு. இவருக்கு 9 ஆண்டுகளுக்கு முன்னர் அஞ்சலி என்ற பெண்ணுடன்  திருமணம் ஆனது. இந்த தம்பதிக்கு  4 மற்றும் 6 வயதுகளில் குழந்தைகள் உள்ளனர். 
இந்நிலையில் சில ஆண்டுகளுக்கு முன்னர் தன் மனைவி அஞ்சலி வேறு ஒருவருடன் பேசிக்கொண்டிருந்தார்.  இதனைப்பார்த்து கோபம் அடைந்த சோனு, இந்த பேச்சை நிறுத்திக்கொள்ளுமாறு கூறியுள்ளார்.
 
ஆனால் இந்தப் பேச்சை தொடர்ந்துள்ளார் அஞ்சலி. அதனால் ஆவேசமடைந்த  சோனு, அருகில் இருந்த கொசு மருத்தை குடிக்க வைத்து, கழுத்தை நெறித்து கொன்றார். பின்னர் குழி தோண்டி மனைவியின் உடலை புதைத்துவிட்டு , உறவினர்களிடம் மனைவியை காணவில்லை என்று கூறியுள்ளார்.
 
இதுகுறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து அஞ்சலியின் விசாரித்து வந்தனர். அதில் பல உண்மைகள் வெளியானது. 
 
போலீஸார் கிடுக்கிப்பிடி விசாரணையில் சோனு குற்றத்தை ஒப்புக்கொண்டார். அவர் கூறியதாவது : மனைவி வேறொருவருடன் பேசிக்கொண்டிருந்து பிடிக்காமல்,அவருக்கு கொசு மருத்து குடிக்க வைத்தேன். அவருக்கு உயிருக்கு போராடிக்கொண்டிருந்த போது, கழுத்தை நெறுத்துக்கொன்றேன். என்று தெரிவித்துள்ளார்.
 
இதைக்கேட்ட போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர்  சோனுவை கைது செய்த போலீஸார் அவரை சிறையில் அடைத்தனர். இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


இதில் மேலும் படிக்கவும் :