1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By papiksha
Last Updated : வெள்ளி, 8 நவம்பர் 2019 (13:05 IST)

அனுஷ்கா பக்கத்தில் தம்மாத்துண்டா இருக்கும் அஞ்சலி! அனுஷ்காவின் ஹைட் இப்போ தெரியுதா?

நடிகை அனுஷ்கா ஷெட்டி வரலாற்று படங்களில் நடிக்கும்போது மிகவும் கட்சிதமாக பொருந்தியிருப்பார். அருந்ததி, பாகுபலி போன்ற படங்களில் அனுஷ்காவின் நடிப்பு திறமை பலராலும் வியந்து பாராட்டப்பட்டது. தமிழ், தெலுங்கு போன்ற இரு மொழிகளில் உச்ச நடிகையாக இருந்து வருகிறார்.

தற்போது இயக்குனர் ஹேமந்த் மதுகர் இயக்கத்தில் உருவாகிவரும் “நிசப்தம்” என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் மாதவன், அஞ்சலி, உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இதற்கிடையில் நேற்று தனது 38வது பிறந்த நாளை நிசப்தம் படக்குழுவினருடன் அனுஷ்கா கொண்டாடியுள்ளார்.



அப்போது நடிகை அஞ்சலியை அனுஷ்கா தூக்கி கொண்டு போஸ் கொடுத்துள்ள போட்டோ இணையத்தில் செம்ம வைரலாகி வருகிறது. அத்தோடு அனுஷ்கா அஞ்சலியை கட்டிப்பிடிப்பது போன்ற புகைப்படமொன்றும் வெளியானது. அனுஷ்காவின் அருகில் அஞ்சலி மிகவும் குட்டியான பெண்ணாக தெரிகிறார். இந்த புகைப்படத்தை கண்ட நெட்டிசன்ஸ் " ஆத்தாடி அனுஷ்கா இம்புட்டு உயரமா என வியந்து வருகின்றனர்.