செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Modified: வியாழன், 25 ஜூலை 2019 (19:40 IST)

பேயை விரட்ட தாய் செய்த காரியம் .. 3 வயது மகள் பலி !

அமெரிக்காவில் உள்ள ஒரு மாகாணத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் தம் மகளுக்கு பிடித்திருந்த பேயை ஓட்டுவதாகச் சொல்லி அவளை கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்க நாட்டைச் சேர்ந்த பெண் ஒருவருகு 3 வயதில் மகள் இருந்தார். அந்த சிறுமி தனியாக நிற்பதையும், தனக்குத் தானே பேசுவதையும் பார்த்த அப்பேண் பயந்து தன் மகளுக்கு பேய் பிடித்துள்ளதாக நினைத்து. வேறு யாரிடமோ தன் மகளைப் பிடித்த பேயை ஓட்டுவதற்காக அறிவுரை கேட்டுள்ளதாகத் தெரிகிறது.
 
இதனைத்தொடர்ந்து தன் மகளை அதிக வெப்பம் கொண்ட  ஒரு காரில் அமரவைத்து, பேயை ஓட்டுவதாகக் சொல்லி கொடுமை செய்துள்ளார். இதில் அச்சிறுமி பரிதாபமாக இறந்ததாகத் தெரிகிறது.
 
இந்நிலையில் தம் மகளைக் கொன்ற அஞ்லினா பாக் என்ற மேற்சொன்ன பெண்ணை கைது செய்து போலீஸார், கோர்டில் ஆகர் படுத்தினர். அப்போது அவருக்கு25 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்தார் நீதிபதி. தற்போது அப்பெண்ணில் கணவரிடமும் போலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.