ராஜமவுலி படத்தில் மீண்டும் இணைந்த அனுஷ்கா!

Papiksha| Last Updated: புதன், 23 அக்டோபர் 2019 (17:07 IST)
பிரம்மாண்ட இயக்குனர் ராஜமவுலி பாகுபலி, பாகுபலி 2 படத்தின் மூலம் உலக புகழ் பெற்ற இயக்குனர்களில் ஒருவராக பார்க்கப்பட்டார். இப்படத்தில் நாயகன் பிரபாஸுக்கு ஜோடியாக வீரமான இளவரசியாக நடித்திருந்தவர் அனுஷ்கா. அந்த படத்தில் அவரது நடிப்பு உலக முழுக்க உள்ள சினிமா ரசிகர்களால் பாராட்டப்பட்டது. 


 
பாகுபலி படத்திற்கு பிறகு பிரபாஸுடன் காதல் கிசுகிசுக்கப்பட்ட அனுஷ்கா அதைப்பற்றி எதையும் உறுதிப்படுத்தாமல் அமைதியாக இருந்து வந்தார். பின்னர் வேறு எந்த படத்திலும் கம்மிட் ஆகாமல் இருந்து வந்த அவர் தற்போது மாதவனுடன் இணைந்து "சைலன்ஸ்" என்ற ஆங்கில படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் தெலுங்கில் நிசப்தம் என்ற பெயரில் தயாராகி வருவதோடு தமிழிலும் வெளியாகவுள்ளது. 
 
இந்நிலையில் தற்போது இயக்குனர் ராஜமவுலி இயக்கத்தில் ராம்சரண், அலியாபட் நடித்து வரும்  'ஆர்ஆர்ஆர்' அனுஷ்கா சிறப்பு தோற்றத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பில் விரைவில் அனுஷ்கா கலந்து கொள்வார் என எதிர்பார்க்கலாம். 


இதில் மேலும் படிக்கவும் :