செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: செவ்வாய், 24 ஜனவரி 2023 (14:10 IST)

கடலுக்கு நடுவே ஜொலிக்கும் அழகோடு ஆண்ட்ரியா… அட்வென்ச்சர் போட்டோஷூட்!

நடிகை ஆன்ட்ரியா தமிழில் பச்சைக்கிளி முத்துச்சரம் படம் மூலம் அறிமுகமானவர். தொடர்ந்து தனது கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடித்து வருகிறார். மேலும் ஒரு திறமையான பாடகி என்பது அனைவரும் அறிந்ததே. பல்வேறு திரைப்பட பாடல்களையும் பாடியிருக்கிறார்.

இவரது நடிப்பில் வெளிவந்த வட சென்னை, தரமணி, ஆயிரத்தில் ஒருவன் உள்ளிட்ட படங்கள் ரசிகர்களோடேயே நல்ல வரவேற்பை பெற்றதுடன் திறமையான நடிகையாக பார்க்கப்பட்டார். தற்போது அவர் மிஷ்கின் இயக்கத்தில் பிசாசு 2 திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படம் விரைவில் ரிலீஸ் ஆக உள்ளது.

இந்நிலையில் அவர் சமூகவலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் கவனத்தை ஈர்த்துள்ளன. கடலுக்கு நடுவே படகில் வெள்ளை உடை அணிந்து அவர் வெளியிட்டுள்ள வித்தியாசமான போட்டோஷூட் கவனத்தை ஈர்த்துள்ளது.