1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Modified: செவ்வாய், 24 ஜனவரி 2023 (13:02 IST)

உண்மையான வெற்றி இதுதான் - பாடம் புகட்டிய எச். வினோத்!

அல்டிமேட் ஸ்டார் அஜித் குமார் நடிப்பில் பொங்கல் தினத்தை முன்னிட்டு ஜனவரி 11ம் தேதி வெளியான திரைப்படம் துணிவு. இப்படத்தை இயக்குனர் எச். வினோத் இயக்கி இருந்தார். படம் தற்போதுவரை ரூ. 200 கோடிக்கு மேல் வசூல் ஈட்டி மாபெரும் சாதனை படைத்துள்ளது. 
 
உண்மையில் விஜய் படத்தை விட அஜித்தின் துணிவு தான் நன்றாக இருந்தது. வசூலில் கூட முதலித்தை பிடித்துள்ளதாக பாக்ஸ் ஆபீஸ் நிலவரங்கள் கூறுகிறது. 
 
இந்நிலையில் தற்போது துணிவு படத்தின் 200 கோடி கலெக்ஷ்ன் வெற்றியை கொண்டாடும் விதமாக இயக்குனர் எச். வினோத்தின் அப்பாவுக்கு திரையரங்கில் மரியாதையை செலுத்தியுள்ளனர். 
 
இந்த போட்டோக்களை அஜித் ரசிகர்கள் சமூகவலைத்தளங்களில் வெளியிட்டு,  "இந்தா பார்த்தீங்களா? இது தான் உண்மையான வெற்றி என கூறி வைரலாக்கி வருகிறார்கள்.