அஜித்தின் ‘துணிவு’ இந்த உண்மை நிகழ்ச்சியின் தழுவலா?
அஜித் நடித்து வரும் துணிவு படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை ரசிகர் மத்தியில் பெற்றது என்பதை பார்த்தோம். இந்த நிலையில் தற்போது வந்திருக்கும் தகவலின்படி இந்த படத்தின் கதை குறித்த தகவல் கசிந்துள்ளது
ஏற்கனவே இந்த படம் ஒரு வங்கிக் கொள்ளை கதையம்சம் கொண்டது என்று கூறப்பட்ட நிலையில் இது பஞ்சாப் மாநிலத்தில் நடந்த உண்மையான வங்கிக் கொள்ளையை தழுவி கதை அமைக்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது
கடந்த 1987 ஆம் ஆண்டு பஞ்சாப் மாநிலத்தில் சுமார் 15 பேர் காவல் அதிகாரிகள் போல் உடை அணிந்து ஆயுதங்களையும் எடுத்துக் கொண்டு அதிரடியாக வங்கிக்குள் நுழைந்து சுமார் ரூ.4.5 மில்லியன் பணத்தை கொள்ளை அடித்ததாகவும், இந்திய வரலாற்றில் இந்த கொள்ளை மிகப்பெரிய ஒன்றாக கருதப்படுகிறது என்றும் கூறப்படுகிறது
மேலும் இந்த கொலையின் போது ஒருவர் கூட காயம் கூட அடையவில்லை என்றும் போலீசார் விசாரணையில் இது ஒரு புத்திசாலித்தனமான கொள்ளை என்று கூறப்பட்டதாக தெரிகிறது. இந்த கொள்ளையை தழுவி தான் துணிவு படத்தின் கதை உருவாக்கப்பட்டுள்ளதாக கூறப்படுவதால் பெரும் ஆச்சரியம் ஏற்பட்டுள்ளது