வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: புதன், 21 செப்டம்பர் 2022 (18:39 IST)

அஜித்தின் ‘ஏகே 61 படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட்லுக்

thunivu1
அஜித்தின் ‘ஏகே 61 படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட்லுக்
அஜித் நடித்து வரும் ‘ஏகே 61 படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியாகும் என ஏற்கனவே சமூக வலைத்தளங்களில் செய்திகள் வெளியானது என்பதை பார்த்தோம். 
 
இந்த நிலையில் சற்று முன் போனி கபூர் தனது டுவிட்டர் ‘ஏகே 61 படத்தின் டைட்டில் துணிவு என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். மேலும் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரையும் அவர் வெளியிட்டுள்ள நிலையில் அந்த போஸ்டர் தற்போது இணைய தளங்களை ஸ்தம்பித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
அஜித் அட்டகாசமாக கையில் துப்பாக்கியை வைத்துக் கொண்டு சாய்ந்து படுத்து இருக்கும் இந்த புகைப்படம் அஜித் ரசிகர்களுக்கு பெரும் விருந்தாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
எச் வினோத் இயக்கத்தில் ஜிப்ரான் இசையில் போனிகபூர் தயாரிப்பில் உருவாகி இந்த படத்தில் மஞ்சு வாரியர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது