திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: புதன், 21 செப்டம்பர் 2022 (11:34 IST)

அஜித்தின் ‘ஏகே 61’ டைட்டில் & ஃபர்ஸ்ட்லுக்: இன்று மாலை 6 மணிக்கு என தகவல்!

AK61
அஜித் நடித்து வரும் ‘ஏகே 61 என்ற படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். மேலும் இந்த படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு பாங்காக் நகரில் நடைபெற இருப்பதாகவும் இதற்காக படக்குழுவினர் பாங்காக் சென்று விட்டதாகவும் அஜித் இன்று அல்லது நாளை பாங்காக் செல்வார் என்றும் கூறப்படுகிறது
 
இந்த நிலையில் இந்த படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏற்கனவே இந்த படத்தின் டைட்டில் துணிவே துணை என்று கூறப்பட்ட நிலையில் அந்த டைட்டில் தானா அல்லது புதிய டைட்டிலா என்பதை இன்று மாலை 6 மணிக்கு தான் தெரிந்து கொள்ள முடியும்.
 
ஜிப்ரான் இசையில் போனி கபூர் தயாரிப்பில் அஜித், மஞ்சுவாரியர் நடிப்பில் உருவாகியுள்ள இந்த படம் அடுத்த ஆண்டு பொங்கல் அல்லது தமிழ் புத்தாண்டில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.