திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: புதன், 21 செப்டம்பர் 2022 (16:09 IST)

அஜித் பட நடிகைக்கு கோல்டன் விசா வழங்கிய ஐக்கிய அரபு அமீரகம்

bhavana
அஜித் பட நடிகைக்கு கோல்டன் விசா வழங்கிய ஐக்கிய அரபு அமீரகம்
ஐக்கிய அரபு அமீரகம் கடந்த சில மாதங்களில் கமல்ஹாசன் உள்பட பல திரையுலக நட்சத்திரங்ளுக்குள் கோல்டன் விசா வழங்கி வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். இந்த நிலையில் தற்போது அஜித் பட நடிகைக்கு கோல்டன் விசா வழங்கப்பட்டுள்ளது 
 
கடந்த 2010ஆம் ஆண்டு வெளியான அஜீத் நடித்த அசல் என்ற திரைப்படத்தில் நாயகியாக நடித்தவர் நடிகை பாவனா. மேலும் இவர்இவர் தமிழில் தீபாவளி ஆறு வெயில் ஜெயம்கொண்டான் உள்பட பல திரைப்படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
 
 இவருக்கு தற்போது ஐக்கிய அரபு அமீரகம் கோல்டன் விசா வழங்கி உள்ளது. இது குறித்த புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடப்பட்டது
 
நடிகை பாவனா கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக திரையுலகில் செய்துவரும் சாதனைக்காக இந்த கோல்டன் விசா வழங்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
 கோல்டன் விசா வைத்திருப்பவர்கள் 10 ஆண்டுகளுக்கு ஐக்கிய அமீரகத்தில் குடிமகன்களாக கருதப்படுவார்கள் என்பது குறிப்பிடப்பட்டது.