1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: செவ்வாய், 30 ஆகஸ்ட் 2022 (21:19 IST)

அஜித்தின் ‘ஏகே 61’ படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு இந்த நாட்டிலா?

AK61
அஜித் தற்போது ‘ஏகே 61 என்ற படத்தின் படப்பிடிப்பில் உள்ளார் என்பதும் ஆந்திராவில் நடைபெறும் இந்த படப்பிடிப்பில் அஜீத் மஞ்சுவாரியர் உள்பட பலர் கலந்து கொண்டுள்ளனர் என்பதும் தெரிந்ததே
 
இந்த நிலையில் செப்டம்பர் 2 ஆம் தேதி முதல் இந்த படத்தின் படப்பிடிப்பு பாங்காக் நாட்டில் நடைபெற இருப்பதாகவும் அங்கு 21 நாட்கள் இந்த படத்தின் படப்பிடிப்பு நடத்த இயக்குனர் எச் வினோத் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது
 
 மேலும் இதுவரை நீண்ட தாடியுடன் இருக்கும் அஜித், பாங்காக் படப்பிடிப்பின்போது கெட்டப் மாற உள்ளதாகவும் அவரது வித்தியாசமான கெட்டப்பை படக்குழுவினர் ரகசியமாக வைத்திருப்பதாகவும் கூறப்படுகிறது
 
ஜிப்ரான் இசையமைத்து வரும் இந்த படத்தை போனிகபூர் பெரும் பொருட்செலவில் தயாரித்து வருகிறார் என்பதும் இந்த படம் அடுத்த ஆண்டு பொங்கல் தினத்தில் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது