திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: திங்கள், 29 ஆகஸ்ட் 2022 (21:31 IST)

மலையாளத்தில் அறிமுகமாகும் விஜய் பட நடிகை !

thamanna
தமிழ் சினிமாவில் வியாபாரி என்ற படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகம் ஆனவர் தமன்னா. அதன்பின், பையா, சுறா, அயன், வீரம் உள்ளிட்ட படங்களில் நடித்து ரசிகர்களிடையே பிரபமானார் தமன்னா.

அதன்பின், தேவி, பாகுபலி போன்ற படங்களுக்குப் பின் அவர் முன்னணி நடிகையானார். இந்த நிலையில், இவர் நடிப்பில் உருவாகியுள்ள பப்ளி பவுன்சர் என்ற படம் வரும் செப்டம்பர் 23 ஆம் தேதி ஓடிடி( டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டார்) தளத்தில் வெளியாகவுள்ளது. 

இந்த  நிலையில், மலையாள சினிமாவில் பிரபல இயக்குனர் அருண் கோபி இயக்கத்தில், திலீப் நடிக்கும் ஒரு புதிய படத்தில் அவருக்கு ஜோடியாக தமன்னா நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகிறது.

மேலும், ரஜினி – நெல்சன் கூட்டணியில் உருவாகும் ஜெயிலர் படத்திலும் தமன்னா முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது.