திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: செவ்வாய், 30 ஆகஸ்ட் 2022 (11:23 IST)

அஜித் 62 படத்தில் நடிக்கப் போவது இந்த நடிகையா? 22 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் கூட்டணி!

நடிகர் அஜித் நடிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அடுத்து உருவாக உள்ள திரைப்படம் அஜித் 62.

சமீபகாலங்களாக அஜித் ஒரு படடத்துக்கும் அடுத்த படத்துக்கும் இடையே அதிக இடைவெளியை எடுத்துக்கொள்கிறார். அதுபோலவே ஒரு படம் முடிந்த பின்னரே அடுத்த படத்துக்கான அறிவிப்பையும் வெளியாகுமாறு பார்த்துக் கொள்கிறார். ஆனால் இப்போது அவரின் அஜித் 61 படம் தொடங்குவதற்கு முன்னதாகவே விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிக்கும் 62 ஆவது படத்தின் அறிவிப்பு வெளியாகி ரசிகர்களுக்கு டபுள் டிரீட்டாக அமைந்துள்ளது.

சில தினங்களுக்கு வெளியான அப்டேட்டின்படி ‘அஜித்தின் 62வது திரைப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அனிருத் இசையில் இந்த படம் உருவாக இருப்பதாகவும் இந்த படத்தின் படப்பிடிப்பு இந்த ஆண்டு இறுதியில் தொடங்கி அடுத்த ஆண்டு இந்த படம் ரிலீஸ் செய்ய இருப்பதாகவும்’ அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் நிர்வாகத் தயாரிப்பாளராகவும் விக்னேஷ் சிவன் செயல்பட உள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராயை நடிக்க வைக்க அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தப்படுவதாக சொல்லப்படுகிறது. ஏற்கனவே இவர்கள் இருவரும் 2000 ஆம் ஆண்டு வெளியான கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் திரைப்படத்தில் இணைந்து நடித்துள்ளனர். ஆனால் ஜோடியாக நடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.