உறுதியானது வரலட்சுமியின் திருமணம்... மாப்பிளை யாருன்னு தெரிந்தால் ஷாக் ஆகிடுவீங்க!

Papiksha Joseph| Last Updated: செவ்வாய், 19 மே 2020 (16:39 IST)

போடா போடி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை வரலக்ஷ்மி சரத்குமார். தொடர்ந்து தாரை தப்பட்டை, மாரி 2 , சர்க்கார், விக்ரம் வேதா, சண்டக்கோழி 2 , போன்ற படங்களில் வித்யாசமான கதாபாத்திரங்கள் ஏற்று நடித்திருந்தார்.

நடிப்பது மட்டும் தன் கடமை என்று நிறுத்தி விடாமல் தொடர்ந்து சமூகத்திற்கு எதிராக நடக்கும் அவலங்களை தட்டி கேட்பது, பெண்களுக்கு எதிராக நடக்கும் அநீதிகளை எதிர்த்து சக்தி என்ற பெண்களுக்கு பாதுகாப்பான அமைப்பையும் நடத்தி வருகிறார். வரலக்ஷ்மி கடந்த சில வருடங்களாக நடிகர் விஷாலை காதலித்து வந்தார். நடிகர் சங்க கட்டிடம் கட்டிமுடித்ததும் திருமணம் செய்துகொள்வதாக விஷால் தெரிவித்திருந்த நிலையில் சங்கத்தின் உறுப்பினர் ஆனதும் வரலட்சுமியின் அப்பா சரத்குமாரை அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கினார். இதனால் இரு குடும்பத்திற்குள்
மனக்கசப்பு ஏற்பட்டு பின்னர் இவர்களின் காதல் முறிந்துவிட்டது. விஷாலுக்கும் வேறொரு பெண்ணுடன் நிச்சயம் ஆகிவிட்டது.

இந்நிலையில் நடிகை வரலட்சுமிக்கு விரைவில் திருமணம் நடக்கவுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.
மாப்பிள்ளை வீட்டாரும் வரலஷ்மி வீட்டாரும் குடும்ப நண்பர்களும்.
இந்திய கிரிக்கெட் அணியில் முக்கிய பொறுப்பில் இருந்து வரும் அவர் தோனி மற்றும விராட் கோஹ்லி நெருங்கிய நண்பர் எனவும் கூறப்படுகிறது. எனவே கொடிய விரையில் சரத்குமார் வீட்டிற்கு மற்றுமொரு கிரிக்கெட் மாப்பிளை வரப்போவது உறுதி. இதற்கு முன்னர் வரலக்ஷ்மியின் தங்கை ரேயன் அபிமன்யு மிதுன் என்ற கிரிக்கெட் வீரரை காதலித்து திருமணம் செய்துகொண்டது குறிப்பிடத்தக்கது.


இதில் மேலும் படிக்கவும் :