செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Updated : சனி, 25 ஏப்ரல் 2020 (16:07 IST)

"லாக்டவுனுக்குள் இன்னொரு லாக்டவுன்? ஒர்ஸ்ட் ஐடியா - நடிகை வரலக்ஷ்மி!

சீனாவின் வுஹான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தோன்றிய கொரோனா வைரஸ் படிப்படியாக பரவி அமெரிக்கா, இத்தாலி, இங்கிலாந்து, ஈரான், ஸ்பெயின் உள்ளிட்ட பல்வேறு     நாடுகளில் உள்ள மனித இனத்திற்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. இதனால் இந்தியா உட்பட பல்வேறு நாடுகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்து கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் நாளை முதல் இன்னும் நான்கு நாட்களுக்கு சென்னை உள்ளிட்ட பல நகரங்களில் ஊரடங்கு மிக தீவிரமாக அமல் படுத்தப்பட்டு முழு நேர ஊரடங்கு கடைபிடிக்கப்டும் என அறிவித்துள்ளனர். இந்த அறிவிப்பு பலரையும் அதிருப்திக்குள்ளாக்கியுள்ளது.  இதனால் மக்கள் பலரும் கடைகளில் அத்யாவசிய பொருட்களை வாங்க அலைமோதுகின்றனர். இதனால் சீரான சமூக இடைவெளி கடைபிடிப்பது கேள்வி குறியாகியுள்ளது.

இது குறித்து நடிகை வரலக்ஷ்மி கூறியுள்ளதாவது,  "லாக்டவுனுக்குள் இன்னொரு லாக்டவுன்? இது மோசமான ஐடியா. திட்டமிடாமல் அறிவிக்கப்பட்ட இது இன்னும் நிலைமையை மோசமாக்கும்" என மிகுந்த காட்டத்துடன் கடைகளில் மக்கள் அலைமோதும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.