திங்கள், 27 ஜனவரி 2025
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By Sasikala

வரலட்சுமி விரதம் கடைபிடிக்கப்படுவதன் முக்கிய காரணம் என்ன தெரியுமா....?

ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாத அமாவாசை முடிந்த பின் வரும் வளர்பிறை பௌர்ணமிக்கு முன் வருகிற வெள்ளிக்கிழமை அன்று வரலக்ஷ்மி விரதம் அனுஷ்டிக்கப்படுகிறது.

வரலக்ஷ்மி விரதம் கடைபிடிக்கபடுவதின் முக்கிய நோக்கம் என்னவென்றால் தன கணவன் நீண்ட ஆயுளோடும், ஆரோக்கியத்தோடும் இருக்க வேண்டும், வீட்டில் எல்லா செல்வங்களும் நிறைந்து மகிழ்ச்சியாக இருக்க வேண்டும், மகாலக்ஷ்மியின் அருள் பரிபூரணமாக கிடைக்க வேண்டும் என்பதற்காக வழிபடுவதாகும்.
 
வரலக்ஷ்மி  விரதத்தை யார் வேண்டுமானாலும் செய்யலாம். இவர்கள் தான் செய்ய வேண்டும் என்ற நியதிகள் கிடையாது. உள்ள தூய்மை, உண்மையான இறை பக்தி இருக்கும் அனைவரும் இவ்விரதத்தை மேற்கொள்ள தகுதியானவர்கள் தான்.
 
வரலக்ஷ்மி விரதத்தை திருமணம் ஆகாத பெண்கள் தனக்கு நல்ல கணவன் அமைய வேண்டும் என்று விரதத்தை கடைபிடிக்கலாம். சுமங்கலி பெண்கள் தீர்க்க சுமங்கலியாக இருக்க வேண்டும் என்று கடைபிடிக்கலாம்.
 
வரலக்ஷ்மி விரத பூஜையை ஆரம்பிப்பதற்கு முன் விநாயகரை வழிபட வேண்டும். அதற்க்கு ஒரு வெற்றிலையை எடுத்து அதில் மஞ்சளால் பிள்ளையார் பிடித்து வைத்து அதற்க்கு குங்குமம் வைத்து, விநாயகருக்கு பிடித்த அருகம்புல் வைத்து அவரை வழிபட வேண்டும்.