பிறந்தநாளில் புது தொழிலை தொடங்கிய நடிகை ரோஜா- ஆச்சர்யத்துடன் பாராட்டிய மக்கள்!
சினிமாவில் 10 ஆண்டுகளில் 100 படங்கள் நடித்த நடிகை என்ற பெருமைக்கு உரிமையானவர் நடிகை ரோஜா. இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் எனத் தென்ந்திய மொழி திரை உலகில் முன்னணி நாயகியாக வலம் வந்துகொண்டு இருந்தார். தற்போது தீவிர அரசியலில் ஈடுபட்டு வரும் வரும் ரோஜா ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியில் இணைந்து நகரி தொகுதியில் 2014-ம் ஆண்டு வெற்றிபெற்று எம்எல்ஏ- வானார்.
சமீபத்தில் தன் பிறந்தநாளை கொண்டாடிய இவர் நகரி தொகுதியில் உணவகம் ஒன்றை தொடங்கியுள்ளார். ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் தொடங்கப்பட்டுள்ள இந்த உணவகத்திற்கு ஒய்.எஸ் அண்ணா உணவகம் என்று பெயர் வைத்திருப்பதோடு, அம்மா உணவகத்தினை விடக் குறைந்த விலையில் சாப்பாடு அளிக்கும் விதத்தில் அந்த உணவகத்தில் ஒரு சாப்பாடு ரூ.4க்கு வழங்கப்படுகிறதாம்.
இதை கேள்விபட்ட மக்கள் ரோஜாவின் இந்த செயலை பார்த்து வெகுவாக பாராட்டி வருகின்றனர். பணம் சம்பாதிக்க நினைக்கும் நடிகைக்கு நடுவில் இப்படியொருவரா என அதிர்ச்சியாகியுள்ளனர்.
ஆனால் ஒரு சிலர், ஆந்திர பிரதேசத்தில் 2019-ம் ஆண்டுச் சட்ட மன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் ரோஜாவின் இந்த மலிவு உணவகம் திட்டம் அண்ணா கேண்டீன் போட்டியாகவே ஓட்டுக்களைக் கவரவே என்று விமர்சிக்கப்பட்டு வருகிறது.