வியாழன், 9 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : வியாழன், 29 மார்ச் 2018 (12:49 IST)

விமான விபத்தில் உயிர் தப்பிய நடிகை ரோஜா

பிரபல நடிகையும், எம்.எல்.ஏ-வுமான ரோஜா நூலிழையில் உயிர் தப்பிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நேற்று திருப்பதியில் இருந்து ஐதராபாத்துக்கு சென்ற இண்டிகோ நிறுவன விமானத்தின் டயர்கள் வெடித்து தீ பற்றி எரிந்தது. இந்த விபத்தில் நடிகை ரோஜா உள்ளிட்ட பயணிகள் அதிருஷ்டவசமாக உயிர் தப்பினர். 
 
ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் சார்பில் எம்எல்ஏவாக இருப்பவர் நடிகை ரோஜா. இவர், நேற்று இரவு 8.55 மணிக்கு, திருப்பதியில் இருந்து, ஹைதராபாத்  செல்லும் இண்டிகோ விமானத்தில் பயணித்தார். விமானம், இரவு 10.25 மணிக்கு, ஹைதராபாத் ராஜிவ்காந்தி சர்வதேச விமான நிலையத்தில்  தரையிறங்கியபோது, விமானத்தின் ஒரு டயர் திடீரென வெடித்து நெருப்பு வெளியேறியது இதையடுத்து பயணிகள் பதற்றமடைந்தனர். 
இதனையடுத்து பல மணி நேர போராட்டத்திற்குப் பிறகு தீயணைப்பு வீரர்கள் தீயை அனைத்தனர். இதனால் விமானத்தில் இருந்த நடிகை ரோஜா உள்ளிட்ட பயணிகள் பத்திரமாக மீட்கப்பட்டனர். விபத்து காரணமாக ஓடுதளம் மூடப்பட்டது. இதனை தொடர்ந்து 5 விமானங்கள் சென்னைக்கு திருப்பி விடப்பட்டன.  இதனால் அங்கு பரபரப்பான சூழல் நிலவியது.