வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: திங்கள், 16 ஜூலை 2018 (22:06 IST)

7 நாள் தரிசனம் மறுப்பு ஏன்? திருப்பதியில் திருடப்போகிறீர்களா? ரோஜா ஆவேசம்

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெறவிருப்பதால் பக்தர்களுக்கு ஏழுநாள் தரிசன அனுமதி கிடையாது என்று தேவஸ்தானம் அறிவித்துள்ளதற்கு நடிகையும் நகரி தொகுதி எம்.எல்.ஏவுமான ரோஜா ஆவேசம் அடைந்துள்ளார்.
 
ஏழு நாட்கள் பக்தர்களை அனுமதிக்காமல் திருப்பதியில் சுரங்கம் தோண்டி திருடப்போகிறீர்களா? என்று கேள்வி எழுப்பியுள்ள ரோஜா, தரிசனத்தின்போது பக்தர்களை அனுமதிக்கவில்லை என்றால் மக்களை திரட்டி போராட்டம் நடத்துவேன் என்று கூறியுள்ளார்.
 
கடந்த 1994ஆம் மற்றும் 2006ஆம் ஆண்டு நடைபெற்ற கும்பாபிஷேகத்தின்போது பக்தர்கள் அனுமதிக்கப்பட்டதாகவும், இந்த ஆண்டு மட்டும் அனுமதி இல்லை என்று கூறுவது சந்தேகத்தை ஏற்படுத்துவதாகவும் கூறியுள்ள ரோஜா, சிசிடிவிகளையும் அணைத்துவிடுவாத கூறியுள்ளது சந்தேகத்தை அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
 
ஏற்கனவே திருப்பதி ஏழுமலையானுக்கு சொந்தமான ரூ.500 கோடி மதிப்புள்ள நகைகள் காணாமல் போனாதாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில் தொடர்ச்சியாக ஏழுநாட்கள் தரிசனத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது