திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : செவ்வாய், 26 ஜூன் 2018 (21:47 IST)

ரோஜா பட வாய்ப்பை மிஸ் செய்தேன் - ஐஸ்வர்யா பேட்டி

மற்ற படங்களுக்கு கொடுத்த கால்ஷீட் காரணமாக ரோஜா உட்பட இயக்குனர் மணிரத்னம் இயக்கிய 3 படங்களில் நடிக்க முடியாமல் போனது என நடிகை ஐஸ்வர்யா வருத்தம் தெரிவித்துள்ளார்.

 
90களில் பல படங்களில் நடித்து வந்தவர் ஐஸ்வர்யா. நடிகை லட்சுமியின் மகளான இவர் உள்ளே வெளியே, ராசுக்குட்டி, எஜமான் உட்பட பல தமிழ் படங்கள் உட்பட பல தெலுங்கு, கன்னட, இந்தி படங்களிலும் நடித்துள்ளார். சமீபத்தில் ஒரு இணையதள நேர்காணல் ஒன்றில் அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:
 
ரோஜா படத்தில் மதுபாலா நடித்திருந்த கதாபாத்திரம் முதலில் எனக்குதான் வந்தது. ஆனால், அவர்கள் கேட்ட தேதிகளை எனது பாட்டி ஒரு தெலுங்கு படத்திற்கு கொடுத்துவிட்டார். எனவே, ஒரு அற்புதமான வாய்ப்பை தவறவிட்டேன். அதேபோல், மணிரத்னம் இயக்கிய திருடா திருடா படத்தில் ஹீரா நடித்த கதாபாத்திரத்திற்கு என்னை ஆடிஷன் செய்து மணிரத்னம் தேர்வு செய்தார். ஆனால், பிரியதர்ஷன் இயக்கிய ‘கர்தீஷ்’ என்ற இந்தி படத்திற்கு கொடுத்திருந்த கால்ஷீட் காரணமாக அப்படத்திலும் நடிக்க முடியாமல் போனது. 
 
அதேபோல் அஞ்சலி படத்திலும் என்னால் நடிக்க முடியாமல் போனது.
 
இப்படி இந்தியாவே வியக்கும் இயக்குனர் மணிரத்னத்தின் படத்தில் 3 முறை வாய்ப்பிருந்தும் தன்னால் நடிக்க முடியாமல் போனது என ஐஸ்வர்யா சோகத்துடன் கூறினார்.