செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : வியாழன், 22 நவம்பர் 2018 (12:38 IST)

அரசாங்கத்தை மிஞ்சிய நடிகை ரோஜா: பிறந்தநாளன்று செய்த வேலை

நடிகை ரோஜா தனது பிறந்தநாளன்று புது ஹோட்டல் ஒன்றை துவங்கியுள்ளார்.
ஒரு காலத்தில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக திகழ்ந்தவர் தான் ரோஜா. இவர் பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்துள்ளார். அவருக்கென தனி ரசிகர்கள் பட்டாளமே உண்டு.
 
பின்னர் அவர் அரசியலில் நுழைந்த அவர் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸின் மாநில மகளிரணி தலைவியாகவும் இருக்கிறார்.
 
இந்நிலையில் அவர் சமீபத்தில் தனது பிறந்தநாளை கொண்டாடினார். ஆந்திராவில் தனது சொந்த தொகுதியான நகரியில் தனது பிறந்தநாளை முன்னிட்டு ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் புது உணவகத்தை தொடங்கியுள்ளார். அந்த உணவகத்தில் ஒரு சாப்பாடு 4 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
 
ஒரு அரசாங்கமே இந்த விலைக்கு உணவு கொடுக்க முடியாத நிலையில் ரோஜாவின் இத்தகைய செயலுக்கு பல்வேறு தரப்பினர் தங்களது பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.