வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வெள்ளி, 15 மார்ச் 2019 (17:42 IST)

கண்ணாடி முன் அரைநிர்வாணமாக அமலா பால்! வைரலாகும் கவர்ச்சி செல்ஃபி!

“சிந்து சமவெளி” படத்தின் மூலம் தமிழ் சினிமாவில்  அறிமுகமான நடிகை அமலா பால் பிறகு தமிழ், தெலுங்கு , மலையாளம் என பல மொழி திரைப்படங்களில் ரவுண்டு கட்டி வலம் வருகிறார். 
மைனா படத்தில் நடித்து பெரும் புகழை பெற்ற அவர் தொடர்ந்து விஜய், விக்ரம், தனுஷ் என்று தமிழில் முன்னணி நடிகர்களுடன் நடித்துவிட்டார். தமிழில் மட்டுமல்லாது தெலுங்கு மற்றும் மலையாள படங்களிலும் படு பிசியாக நடித்து வந்தார். கடைசியாக நடிகர் விஷ்ணு விஷாலுடன் ‘ராட்சசன்’ படத்தில் நடித்திருந்தார் .
 
இருந்தாலும் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு படவாய்ப்புகள் இல்லாததால் அடிக்கடி போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை சமூகவலைத்தளங்களில் பதிவிடுவதையே முழுநேர வேலையாக வைத்துள்ளார். ஆனால், மீம்ஸ் கிரியேட்டர்கள் அதனை கலாய்த்து தள்ளி விடுகின்றனர். 
அந்த வகையில் சமீபத்தில் கண்ணாடிக்கு முன்பு நின்று உள்ளாடை தெரியும் அளவிற்கு ஒரு கவர்ச்சியான ஆடையில் செல்ஃபி எடுத்துக்கொண்டுள்ளார் அமலா பால். ஏற்கனவே இதுபோன்ற செல்ஃபி எடுத்துக்கொண்ட ஹன்சிகா சர்ச்சையில் சிக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், பெரும்பாலும் நடிகைகள் எடுத்துக்கொள்ளும் இதுபோன்ற புகைப்படங்களை யாருக்கு அனுப்புகிறார்கள் என்பது தான் புரியாத புதிராக உள்ளது.