வியாழன், 9 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: வெள்ளி, 21 அக்டோபர் 2022 (20:57 IST)

நடிகர் தனுஷ் ''பேட்டைகாளி'' படக்குழுவுக்கு வாழ்த்து

pettai kali
பேட்டைக்காளி என்ற இணையதள தொடருக்கு தனுஷ் வாழ்த்துகள் தெரிவித்துள்ளார்.

இயக்குனர் வெற்றிமாறனின் வழிக்காட்டலின்படி தயாரிக்கப்பட்டுள்ள புதிய வெப்தொடர் பேட்டைக்காளி. இந்த வெப் தொடரின் டிரெயிலர் வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னை அடையாறில் உள்ள எம்.ஜி.ஆர் ஜானகி கல்லூரியில் நடந்தது.

மேற்கு தொடர்ச்சி மலை படத்தின் ஹீரோ அந்தோணி இதில் ஹீரோவாக நடித்துள்ளார்.ஜல்லிக்கட்டு காளை அடக்குதல் விளையாட்டை அடிப்படையாகக் கொண்டு இத்தொடர் உருவாக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இத்தொடரை ராஜ்குமார் இயக்கியுள்ளார்.

இப்படத்தில், சந்தோஷ் நாராயணன் இசையில்  உருவாகியுள்ள  ‘’ஏ வர்றாம் பாரு பேட்டக்காளி’’ என்ற டைட்டில் பாடலின் டீசரை தனுஷ் தன் டுவிட்டர் படத்தில் வெளியிட்டு, படக்குழுவுக்கு வாழ்த்துகள் தெரிவித்துள்ளார்.

Edited by Sinoj