வியாழன், 9 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: சனி, 27 ஆகஸ்ட் 2022 (18:15 IST)

விஜய்யை முந்திய நடிகர் தனுஷ்?

vijay dhanush
நடிகர் தனுஷின் திருச்சிற்றலம் படம் விஜய்யின் பீஸ்ட் பட  பீஸ்ட் சாதனையை  முறியடித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

தனுஷ், பிரியா பவானி சங்கர், நித்யாமேனன், ராஷி கண்ணா ஆகியோர்  நடிப்பில் அனிருத் இசையில் மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் வெளியாகியுள்ள திரைப்படம் திருச்சிற்றம்பலம். இந்த படம் உலகம் முழுவதும் நேற்று திரையரங்குகளில் வெளியான நிலையில் இந்த படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், திரைப்படம் வெளியாகி 8 நாட்களில் 50 கோடி ரூபாய் வசூலீட்டுயுள்ளதால் இப்படத்தின் வெற்றியை படக்குழுவினர் கேக் வெட்டிக் கொண்டாடினர். இந்தப் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

இந்த நிலையில்,  தமிழகத்தில், விஜய்யின் பீஸ்ட் படத்தின் 8 நாள் வசூலை திருச்சிற்றம்பலம் படத்தின் வசூல் முறியடித்துள்ளதாகக் கூறப்படுகிறது. எனவே,   தொடர்ந்து 3 படங்கள் சரியாகப் போகாத நிலையில் தற்போது,தனுஷின் திருச்சிற்றம்பலம் சூப்பர்ஹிட் அடித்துள்ளதால் இப்படம் மேலும் சாதனை படைக்கும் எனக் கூறப்படுகிறது.

இப்படத்தின் அதிகார்ப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.