1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : செவ்வாய், 16 ஆகஸ்ட் 2022 (14:26 IST)

சினிமா விமர்சகர் மறைவு- நடிகர் தனுஷ் இரங்கல்!

தமிழ் சினிமா  விமர்சகர் மறைவுக்கு நடிகர் தனுஷ் இரங்கல் தெரிவித்துள்ளார்.

தமிழின் முன்னணி யுடியூப் சேனல்களில் பணியாற்றிவர் கவுசிக். குறிப்பாக திரை விமர்சனங்கள், பிரபலங்களின் நேர்காணல்கள் என ரசிகர்களைப் பெரிதாகக் கவர்ந்தவர். இந்நிலையில் நேற்று அவர் மாரடைப்புக் காரணமாக இயற்கை எய்தியுள்ளார். அவருக்கு வயது 36 மட்டுமே. பலருக்கும் இவரது மரணம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நேற்று இறப்பதற்கு சில மணிநேரங்கள் முன்பு கூட டிவிட்டரில் பல தகவல்களை பகிர்ந்து இயல்பாக இருந்துள்ளார். இவரின் மறைவை ஒட்டி  பிரபல நடிகர்களும், திரை விமர்சகர்களும், ரசிகர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், நடிகர்  தனுஷ் கவுசிக் மரணத்திற்கு தனது டுவிட்டர் பக்கத்தில்  பதிவிட்டுள்ளதாவது:

பிரபல தமிழ் சினிமா விமர்சகர் கவுசிக் மரணம் பற்றிய செய்தி அறிந்து இதயம் உடைகிறேன். சகோதரன் சீக்கிரம் சென்றுவிட்டார். அவர் ஆன்மா சாந்தியடைய கவுளிடம் பிரார்த்திக்கிறேன். அவரது குடும்பத்தினருக்கும், நபர்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்கள் இவ்வாறு இரங்கல் தெரிவித்துள்ளார்.