வியாழன், 2 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : செவ்வாய், 10 அக்டோபர் 2023 (17:07 IST)

வரலாற்றுப் படத்தில் நடிகர் அஜித்? வைரலாகும் அவரது AI புகைப்படங்கள்

ajithkumar
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் அஜித்குமார். இவர் ஐரோப்பிய பைக் பயணத்தை முடித்த பின் சமீபத்தில் ஓமனில் பைக் சுற்றுப் பயணம் மேற்கொண்டார்.

இதையடுத்து, சென்னை திரும்பினார்.எனவே விரைவில் அஜித்2 படம் பற்றிய அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஏற்கனவே,   இந்த திரைப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க, மகிழ்திருமேனி இயக்குகிறார். அனிருத் இசையமைக்கிறார் என அறிவிக்கப்பட்ட நிலையில், இப்பட ஷூட்டிங் எப்போது என ரசிகர்கள் கேள்வி எழுப்பினர்.

இந்த  நிலையில்  விடாமுயற்சி ஷூட்டிங் அஸர்பைஜான் நாட்டுக்கு அருகே ஒரு பகுதியில் தற்போது தொடங்கி நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், பொன்னியின் செல்வன் பட நடிகர்களைப் போன்று,  நடிகர் அஜித் குமார் தஞ்சை பெரிய கோவில் அருகில் அரசர் கெட்டப்பில் உள்ளது போன்ற   ஏஐ (Artificial Intelligence )புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.
 
ajithkumar

இப்புகைப்படத்தையும், அஜித்தின் கெட்டப்பையும் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.  இதேபோல், வரலாற்றுப் படடத்தில் நடிகர் அஜித் நடிக்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.