கௌதம் மேனன் இயக்கத்தில் மம்மூட்டி நடிக்கும் ‘டாம்னிக்’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் கௌதம் மேனன். அவர் இயக்கிய மின்னலே, காக்க காக்க, வேட்டையாடு விளையாடு, வாரணம் ஆயிரம் படங்கள் ட்ரண்ட் செட்டிங் படங்களாக அமைந்தன. தற்போதைக்கு இயக்குனராக தமிழ் சினிமாவில் அவருக்கு பெரிய வாய்ப்புகள் இல்லை. அதனால் இப்போது மம்மூட்டியை வைத்து ”டாம்னிக் அண்ட் தி லேடிஸ் பர்ஸ்” என்ற மலையாளப் படத்தை இயக்கி வருகிறார்.
இந்த படத்தின் ஷூட்டிங் முடிந்த நிலையில் கடந்த மாதம் படத்தின் டீசர் ஒன்று வெளியானது. அந்த டீசர் மம்மூட்டியும் கோகுல் சுரேஷும் உரையாடிக் கொள்வது போல நகைச்சுவையாக உருவாக்கப்பட்டுள்ளது. மம்மூட்டி ஒரு சீனியர் டிடெக்டிவ் ஆக, கோகுல் சுரேஷுக்கு எப்படி அறிவியல்பூர்வமாக சண்டை போடனும் என சொல்வது போல உருவாக்கி இருந்தனர்.
தற்போது பின் தயாரிப்புப் பணிகள் நடந்து வரும் நிலையில், படம் ஜனவரி 23 ஆம் தேதி ரிலீஸாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.