திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: சனி, 7 அக்டோபர் 2023 (13:15 IST)

ரோலக்ஸுக்கு தம்பி நீங்கதான்… பிரபல நடிகரின் மகனிடம் நடந்த மோசடி!

தமிழில் கடந்த ஆண்டு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன், விஜய் சேதுபதி மற்றும் பஹத் பாசில் நடிப்பில் வெளியாகி பிளாக்பஸ்டரான திரைப்படம் விக்ரம். இந்த படத்தில் சூர்யா ரோலக்ஸ் என்ற கௌரவ வேடத்தில் நடித்திருந்தார். அந்த கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் கவனம் பெற்றது.

இந்நிலையில் அந்த கதாபாத்திரத்தை சொல்லி, பிரபல தெலுங்கு நடிகரான பிரம்மாஜியின் மகன் சத்யராவை ஒரு நபர் ஏமாற்றியுள்ளார். இதுபற்றி சமூகவலைதளத்தில் பகிர்ந்துள்ள அவர் “சம்மந்தப்பட்ட நபர் என்னிடம் லோகேஷின் மேனேஜர் என்று அறிமுகப்படுத்திக் கொண்டார். விக்ரம் 2 படத்தில் ரோலக்ஸின் தம்பியாக நடிக்க ஆட்கள் தேடுவதாக சொல்லி, புகைப்படம் அனுப்ப சொன்னார்.

அனுப்பியதும், ஆடிஷனுக்கான உடைகள் வாடகைக்கு 30000 அனுப்புங்கள். ஆடிஷன் முடிந்ததும் அந்த பணம் திருப்பி அனுப்பப்படும் எனக் கூறினார். நானும் நம்பி அனுப்பினேன். பின்னர் அனுப்பியதும் அந்த ஸ்விட்ச் ஆஃப் செய்யப்பட்டு விட்டது. அதன் பின்னர்தான் நான் ஏமாற்றப்பட்டதை அறிந்தேன்.” எனக் கூறியுள்ளார்.