1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
  4. Another Level Pro Venkat Prabhu praises Lokesh Kanagaraj

'வேற லெவல் புரோ'...லோகேஷ் கனகராஜை பாராட்டிய வெங்கட்பிரபு

leo vijay
தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனர் லோகேஷ் கனகராஜ். இவர் மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம், ஆகிய படங்களை அடுத்து இயக்கியுள்ள படம் லியோ.

இப்படத்தில் விஜய் ஹீரோவாக நடித்துள்ளார். அனிருத்தின் இசையில், அன்பறிவின் ஸ்டண்டில் விஜய்யின் அதிரடி ஆக்சனில், சஞ்சய் தத், அர்ஜூனின் அசத்தல் நடிப்பில் நடிப்பில் உருவாகியுள்ள இப்படத்தை தியேட்டரில் காண்பதற்கு முன்னோட்டமாக அமைந்துள்ள டிரைலர் தமிழ், இந்தி, தெலுங்கு கன்னட ஆகிய மொழிகளிலும் வெளியாகியுள்ளது.

இந்த டிரைலரை விஜய் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இந்த நிலையில், லியோ பட டிரைலர் வெளியான 5 நிமிடத்தில் 1 மில்லியன் வியூஸை பெற்றது. அடுத்த 20  நிமிடங்களில் 29 லட்சம் வியூஸை  கடந்துள்ளது.  3 மொழிகளிலும் சேர்த்து 5 மில்லியன் வியூஸை கடந்து சாதனை படைத்துள்ளது.

லியோ  பான் இந்தியா படமாக வெளியாகவுள்ளதால் எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.

இந்த டிரைலர் பார்த்த வெங்கட்பிரபு, லோகேஷ் கனகராஜை பாராட்டியுள்ளார்.இதுகுறித்து அவர் தன் சமூகவலைதள பக்கத்தில், வேற வெலல் பிரதமர்..அப்சல்யூட் என்று தெரிவித்துள்ளார்.

லியோ படத்தை அடுத்து, வெங்கட்பிரபு இயக்கத்தில் விஜய்68 படம்  நேற்று முன்தினம் பூஜையுடன் தொடங்கியது குறிப்பிடத்தக்கது.

அடுத்த கட்டுரையில்
5 நிமிடத்தில் 1 மில்லியன்.... 15 நிமிடத்தில் 2 மில்லியன் வியூஸை கடந்த 'லியோ' டிரைலர்