1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
  4. Regina Cassandra added to the cast of Vidamuyarchi

விடாமுயற்சி படத்தில் இருந்து விலகிய பிரபல நடிகை..!

அஜித் 62
அஜித் தன்னுடைய 62ஆவது படமான விடாமுயற்சி படத்தில் இப்போது கவனம் செலுத்திக் கொண்டிருக்கிறார்.  இந்த திரைப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க, மகிழ்திருமேனி இயக்குகிறார். அனிருத் இசையமைக்கிறார். இந்தபடத்தின் அறிவிப்பு சில மாதங்களுக்கு முன்னே வெளியாகி இருந்தாலும் ஷூட்டிங் இப்போதுதான் தொடங்கியுள்ளது.

இந்த படத்தில் கதாநாயகியாக திரிஷா நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் இன்னொரு கதாநாயகியாக பாலிவுட் நடிகை ஹூமா குரேஷி நடிக்க உள்ளதாக சொல்லப்பட்டது. ஆனால் இப்போது ஹூமா குரேஷிக்கு பதிலாக ரெஜினா கஸாண்ட்ரா இந்த படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

விடாமுயற்சி ஷூட்டிங் அஸர்பைஜான் நாட்டுக்கு அருகே ஒரு பகுதியில் தற்போது தொடங்கி நடைபெற்று வருவதாக சொல்லப்படுகிறது.
அடுத்த கட்டுரையில்
விஜய்யை இளமையாகக் காட்ட 20 கோடி ரூபாய் செலவு செய்யும் தளபதி 68 படக்குழு!