திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: புதன், 28 செப்டம்பர் 2022 (08:59 IST)

அயோத்தியில் ஆதிபுருஷ் திரைப்படத்தின் டீசர் வெளியீடு… தேதி அறிவிப்பு

ராமாயண கதையை மையமாகக் கொண்டு இந்தியாவின் பல மொழிகளில் ஆதிபுருஷ் என்ற படம் உருவாகி வருகிறது. இந்த படத்தில் கதாநாயகனாக பிரபாஸ் நடிக்க இருக்கிறார். 3 டியில் உருவாகும் இந்த படத்தில் வில்லனாக நடிக்க பிரபல பாலிவுட் சூப்பர் ஸ்டார் நடிகர் சாயிப் அலிகான் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இந்த படத்தில் சீதா கதாபாத்திரத்தில் பாலிவுட் நடிகை கிரித்தி சனோன் நடிக்கிறார்.

இந்த திரைப்படம் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் ரிலீஸ் ஆக உள்ளது. இந்நிலையில் படத்தின் டீசர் மற்றும் முதல் லுக் போஸ்டர் வெளியீடு வரும் அக்டோபர் 2 ஆம் தேதி உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள அயோத்தியில் நடக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.