திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: திங்கள், 26 செப்டம்பர் 2022 (08:49 IST)

ஹாலிவுட் ஏஜென்ஸியோடு இயக்குனர் ராஜமௌலி ஒப்பந்தம்!

இயக்குனர் ராஜமௌலி அடுத்து இயக்க உள்ள படத்துக்கான வேலைகளில் இப்போது ஈடுபட்டு வருகிறார்.

இயக்குனர் ராஜமௌலி இதுவரை தொட்டதெல்லாம் ஹிட்தான். அதுபோல தெலுங்கு சினிமாவின் முன்னணி கதாநாயகர்கள் எல்லோருக்கும் அவர் ஹிட் கொடுத்துவிட்டார். இன்னும் மகேஷ் பாபுவோடு மட்டும் இணையவில்லை. இந்நிலையில் ஆர் ஆர் ஆர் படத்துக்கு பிறகு இருவரும் இணைய இருக்கின்றனர். இந்த படம் புதையலைத் தேடி செல்லும் ஒரு சாகச திரைக்கதையாக அமையும் என சொல்லப்படுகிறது. ஆனால் இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை.

இந்நிலையில் ஆர் ஆர் ஆர் படம் மூலமாக ஹாலிவுட் ரசிகர்களைக் கவர்ந்துள்ள ராஜமௌலி இப்போது ஒரு ஹாலிவுட் டேலண்ட் மேனேஜ்மெண்ட் நிறுவனத்தோடு ஒப்பந்தத்தில் இணைந்துள்ளார்.  கிரியேட்டிவ் ஆர்ட்டிஸ்ட்ஸ் ஏஜென்ஸி எனும் இந்த நிறுவனம் பிரபலமான கலைஞர்கள் மற்றும் விளையாட்டு வீரர்களின் திறமைகளை அடையாளம் கண்டு ஊக்குவிக்கும் நிறுவனமாக அறியப்படுகிறது.