வியாழன், 9 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: செவ்வாய், 20 ஜூலை 2021 (11:13 IST)

ஆதிக்கு இவ்வளவும் சம்பளமா? லிங்குசாமி பட அப்டேட்!

லிங்குசாமி படத்தில் நடிக்க ஆதிக்கு நான்கு கோடி ரூபாய் சம்பளம் அளிக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

இயக்குனர் லிங்குசாமி தெலுங்கு நடிகர் ராம் பொத்திலேனியை வைத்து ஒரு படத்தை இயக்க உள்ளார். இந்த படத்தின் வில்லன் கதாபாத்திரத்துக்காக பல முன்னணி நடிகர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியும் சரிவராத நிலையில் இப்போது லிங்குசாமி படங்களில் கதாநாயகனாக நடித்த மாதவனிடம் பேச்சுவார்த்தை நடத்தி அவரும் சம்மதம் தெரிவித்ததாக சொல்லப்பட்டது. ஆனால் இப்போது மாதவன் அந்த வேடத்தில் நடிக்க வில்லை என சொல்லப்படுகிறது. அவருக்கு பதிலாக நடிகர் ஆதி அந்த கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இந்த வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க அவருக்கு 4 கோடி ரூபாய் சம்பளம் அளிக்கப்படுவதாக சொல்லப்படுகிறது. ஆதிக்கு இவ்வளவு பெரிய தொகையா என சினிமா உலகினர் அதிர்ச்சியும் ஆச்சர்யமும் அடைந்துள்ளனராம்.