திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: வெள்ளி, 16 ஜூலை 2021 (19:16 IST)

ஷங்கரின் பிரமாண்ட படத்தின் அடுத்த அப்டேட் !

கமல்ஹாசன் நடித்து வரும் இந்தியன் 2 படத்தை இயக்கி வந்த இயக்குநர் ஷங்கர்  திடீரென அந்த படத்தை கைவிட்டுவிட்டு தற்போது ராம்சரண் தேஜா நடித்த உள்ள தெலுங்கு படம் ஒன்றை இயக்கவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியானது. இந்நிலையில் இப்படத்தின் முக்கிய அப்டேட் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் இந்த படத்தின் கதாநாயகி யார் என்பது அறிவிக்கப்படாத நிலையில் இப்போது கியாரா அத்வானி மற்றும் ராஷ்மிகா மந்தனா ஆகியோரின் பெயர் அடிபட்டு வந்தது. இந்நிலையில் இப்போது கியாரா அத்வானி அதிகாரப்பூர்வமாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். லைகா உடனான பிரச்சனைகளை முடித்துவிட்டு ஷங்கர் ராம்சரண் தேஜாவின் படத்தை இயக்குவார் என சொல்லப்படுகிறது.

இந்நிலையில் இந்த படத்தின் மற்றொரு அப்டேட்டை படக்குழு சார்பாக வெளியிட்டுள்ளனர். அதில் இந்த படத்துக்காக இசையமைப்பாளராக எஸ் எஸ் தமன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில், ராம்சரணின் 15 வது படத்தை ஷங்கர் இயக்கவுள்ளதால் இப்படத்தின் ஆரம்பக் கட்டப்பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இதற்கிடையே நடிகர் ராம் சரண் இயக்குநர் ஷங்கரை சென்னையில் சந்தித்துப் பேசினார். இப்படம் குறித்து இருவரும் ஆலோசித்ததாகவும் கூறப்படுகிறது.

மேலும் இப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் மற்றும் மோசன் போஸ்டர் விரைவில் வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ள நிலையில் இப்படம் குறித்த முக்கியதகவல் வெளியாகிறது.

ஷங்கர் படங்கள் வருடக் கணக்கில் ஷூட்டிங் மற்றும் போஸ்ட் புரொடெக்சன் , கிராபிக்ஸ் வேலைகள் என நீளும் நிலையில் ராம்சரண்- ஷங்கர் இணையும் பிரமாண்ட படத்தைக் குறுகிய காலத்தில் முடித்து ரிலீஸுக்குக் கொண்டுவரத் திட்டமிட்டுள்ளனர்.

தில்ராஜு தயாரிப்பில் அதிகப் பொருட்செலவில் உருவாகவுள்ள இப்படம் ஷங்கரின் இமேஜ் மட்டுமின்றி அவரது படைப்பையும் அடுத்தக்கட்டத்திற்கு கொண்டுசெல்லவும் எனவும், தற்போது இளம் சூப்பர்ஸ்டாரக மார்க்கெட் உள்ள ராம்சரணுடன் அவருடன் இணையவுள்ளது இந்திய சினிமாத்துறையினரையே ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.