வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sinoj
Last Modified: திங்கள், 20 செப்டம்பர் 2021 (15:37 IST)

ஆர்யா பட நடிகைக்கு 2 விருதுகள் !

ஆர்யா நடிப்பில் வெளியாகிப் பெரும் வெற்றி பெற்ற படம் மகாமுனி. இப்படத்தில் அவருடன் இணைந்து நடித்தவர்கள் இந்துஹா மற்றும்  மகிமா நம்பியார். இந்நிலையில் மகிமா நம்பியாருக்கு  2 சர்வதேச விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

அருள்நிதி நடித்த மெளனகுரு படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகம் ஆனவர் சாந்தகுமார். இவரது 2 வது படம் மகாமுனி. இப்படத்தில் ஆர்யா, இந்துஜா, மகிமா நம்பியார் நடித்தனர். இப்படமும் பெரும் வரவேற்பை பெற்றது.

கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியான இப்படம் நல்ல விமர்சனத்தையும் பெற்றது. இந்நிலையில் இப்படம் ஸ்பெயில் நாட்டில் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது. இதில், மகிமா நம்பியாருக்கு சிறந்த துணைநடிக்கைக்கான விருந்து வழங்கப்பட்டுள்ளது.