1. செய்திகள்
  2. செய்திகள்
  3. அ‌றிவோ‌ம்
Written By Jagadish Ramamoorthy, Co-founder & Director, Alserv
Last Updated : வெள்ளி, 21 ஜனவரி 2022 (12:26 IST)

தெரிந்திருக்க வேண்டிய முக்கியமான 4 முதலுதவி சிகிச்சைகள்...

மூத்த குடிமக்களைக் கவனித்துக் கொள்பவர்களுக்கு / உதவியாளர்களுக்குத் தெரிந்திருக்க வேண்டிய முக்கியமான 4 முதலுதவி சிகிச்சைகள்.

 
வீட்டிலேயே ஏற்படும் சில விபத்துக்கள், பல சமயங்களில் தடுக்கக் கூடியவையே. உங்கள் வீட்டில் ஒரு முதியவர் இருந்தால், நீங்கள் அடிப்படையாக சில முதலுதவி சிகிச்சை முறைகளைத் தெரிந்து வைத்திருந்தால் மிகப் பெரிய அளவில் அவை உதவியாக இருக்கும். சென்னையில் மூத்த குடிமக்களுக்கு உதவிடும் பல அமைப்புகள் உடனடியாக உதவிக்கு வரக்கூடியவை என்றாலும், நீங்கள் உடனடியாகச் செய்யக்கூடிய முதலுதவி அந்த விபத்து/நிகழ்ச்சியின் போக்கையே மாற்றி விடலாம்.
 
வீட்டில் உள்ள முதியவர்களுக்கு பொதுவாக முதலுதவி தேவைப்படும் சூழ்நிலைகள்
● கீழே விழுதல் (falls)
● வெட்டுக்காயம், சிராய்ப்புகள்
● தீக்காயங்கள்
● இரத்தத்தில் சர்க்கரை அளவு குறைந்து மயக்கம் ஏற்படுதல்
 
அத்தகைய சூழல்களை எப்படி சமாளிக்கலாம்?
 
கீழே விழுந்துவிட்டால், தைரியத்துடனும் நம்பிக்கையுடனும் அணுகுங்கள். கண்பார்வை சற்று மங்கியவர்கள், வெர்டிகோ போன்ற பிரச்சினைகள் உள்ளவர்கள், நிலை தடுமாற்றம் உள்ளவர்கள் - இவர்களை போன்றவர்களுக்குப் பொதுவாக அடிக்கடி கீழே விழும் ஆபத்து ஏற்படலாம்.

ஒரு முதியவர் கீழே விழுந்து, ஆனால் பலமான அடி ஏதும் படவில்லையென்றால், அவருக்கு தைரியம் அளித்து மெதுவாக எழுப்பி வசதியாக அவரை உட்கார வைக்கவும். வீக்கம், காயம் ஏற்பட்டுள்ளதா என்று பார்க்கவும். காயம் பட்ட இடத்தை சற்று உயர்த்தி வைத்து ஐஸ் ஒத்தடம் கொடுக்கலாம். ஒரு வேளை தலை, கழுத்து, முதுகு, இடுப்பு போன்ற பகுதிகளில் பலமான அடிபட்டிருக்கும் என சந்தேகம் ஏற்பட்டால் உடனே மருத்துவ உதவி பெறவும்.
 
ஒருவேளை கீழே விழுந்தவர் மயக்கமாகிவிட்டால் அவரது நாடித்துடிப்பைப் பார்க்கவும் (Pulse) மருத்துவர் வரும்வரை வசதியாக அவரைப் படுக்க வைக்கவும். இரத்தத்தில் சர்க்கரை அளவை பரிசோதிக்கவும். ஏனெனில் அந்த அளவு மிகக் குறைந்தாலும் மயக்கம் ஏற்படலாம். மிக மிக அவசியமாக இருந்தாலும் கூட, நீங்கள் பயிற்சி பெறாவிட்டால் CPR செய்ய முயற்சிக்க வேண்டாம்.
 
2. வெட்டுக் காயங்களுக்கு ஒரு சாதாரண பேண்டேஜ் போடவும்.
வயதாக ஆக நமது சருமம் சுருங்கி எளிதில் காயங்களும் வெட்டுக்களும் ஏற்படக் கூடியதாக ஆவது இயல்புதான். சிறிய காயங்களுக்கு வீட்டிலேயே எளிதாக சிகிச்சை அளிக்கலாம். காயத்தை நன்கு நீரை விட்டு சுத்தம் செய்து அதில் உள்ள அழுக்குகளை நீக்கவும். அந்த இடத்தில் ஐஸ் வைப்பதைத் தவிர்க்கவும். அது சில சமயங்களில் பாதிப்பை ஏற்படுத்தலாம். தொடர்ந்து ரத்தம் வந்தால், சிறியதாக பேண்டேஜ் போடலாம். அது அடிக்கடி மாற்றப்படுவதையும் உறுதி செய்து கொள்ள வேண்டும்.

சர்க்கரை நோய் இருப்பவர்கள், இரத்தத்தின் அடர்த்தியைக் குறைக்கும் blood thinner மாத்திரைகளை எடுத்துக் கொள்பவர்கள் போன்றவர்களுக்கு மிகக் கவனமாக அடிக்கடி காயம்பட்ட இடத்தைப் பார்த்து சிகிச்சை அளிக்க வேண்டும். மிகவும் ஆழமான காயமாக இருந்தால், உடனடியாக மருத்துவரை நாடவேண்டும்.
 
3. முதல் டிகிரி தீக்காயங்கள் - குளிர வைத்தல்.
 
தீக்காயங்கள் பலவகைப்படும். பொதுவாகப் பலருக்கு முதல் டிகிரி காயங்கள்தான் ஏற்படும்.
மிகவும் சூடாக உள்ள தோசைக்கல் அல்லது பாத்திரத்தைத் தொடுதல் அல்லது கையுறை
அணியாமல் ‘மைக்ரோவேவ் அவன்’னிலிருந்து எதையாவது எடுத்தல் போன்றவற்றால் அந்த இடத்தில் தீக்காயம் ஏற்படும். மூன்றாவது டிகிரி தீக்காயங்களால் உயிருக்கு ஆபத்து இல்லை என்றாலும், மிகவும் வலி இருக்கும். சரியாக சிகிச்சை அளிக்காவிட்டால், தழும்புகள் ஏற்படும்.

காயம் பட்டவுடன் சாதாரணமாக குளிர்ந்த நீரை (மிகவும் குளிர்ந்த நீர் அல்ல) அந்த காயத்தின் மேல் விடவும். பிறகு ஒரு இதமான சோப் கொண்டு மெதுவாக சுத்தம் செய்யவும். 10-15 நிமிடங்களுக்கு ஒரு முறை குளிர்ந்த ஒத்தடம் கொடுத்தால் வலியும் வீக்கமும் குறையலாம். 

பொதுவாக மருந்துக் கடைகளில் கிடைக்கும் ஆன்டிபயாடிக் ஆயின்ட்மெண்ட்கள், மேலும்
தொற்று ஏற்படாமல் தவிர்க்கலாம். காயம்பட்ட இடத்தில் நேரடியாக சூரிய ஒளி படுவதைத்
தவிர்க்கவும். தானாகவே ஒரு சில வாரங்களில் புண் ஆறிவிடும். தீவிரமான தீக்காயங்கள் ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரை தொடர்பு கொள்ளவும். 

சென்னையில், அல்சர்வ் நிறுவனம், தங்களது ‘நோயாளிகளுக்கான சேவைகள்’ (Patient Care
Services) மூலம் வீட்டிற்கே மருத்துவர்களை அழைத்து வரவும், அவசர காலங்களில் தொலைபேசி மூலம் ஆலோசனைகள் பெறவும் ஏற்பாடு செய்கிறது.
 
4. ஹைபோதெர்மியா ஏற்பட்டால் கதகதப்பாக வைத்திருக்கவும்.
கால் தடுக்கிக் கீழே விழுந்தால், சில சமயங்களில் 50 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு, உடல்
சில்லிட்டுப் போகுதல், நடுக்கம், குழப்பம் போன்றவை ஏற்படலாம். இத்தகைய ஹைபோதெர்மியா பெரும்பாலும் முதியவர்கள் குளியலறையில் வழுக்கி விழும்போது ஏற்படுகிறது. அவ்வாறு அவர்கள் விழுந்து விட்டால் அவர்களை மெதுவாக அங்கிருந்து அறைக்குக் கூட்டிவந்து, ஈர உடைகளை மாற்றி, தேவைப்பட்டால் ஒரு போர்வை
கொண்டு போர்த்தவும்.

முதலில் மார்புப் பகுதி, பின்பு அடி வயிற்றுப்பகுதி, பின்பு கை, 
கால்கள் என்று அவர்களுக்கு கதகதப்பு ஏற்படுமாறு செய்யவும். நடுக்கம் அதிகரித்து, மூச்சு விடுவதிலும் சிரமம் ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரை நாடவும். வருமுன்னர்க் காப்பதே சிறந்தது. பல சமயங்களில் இத்தகைய சந்தர்ப்பங்கள் திடீரென்றுதான் ஏற்படுகின்றன. ஆனாலும் வீடுகளில் விபத்துக்களைக் குறைப்பதற்கு நாம் சில முன்னேற்பாடுகளைச் செய்யலாம்.
 
பழுதடைந்த எலெக்ட்ரிக் சாக்கெட்டுகள், தொங்கும் மின்சார வயர்கள், ஆபத்தான குளியலறைகள் போன்றவை ஆபத்துகளை அதிகரிக்கலாம். “அல்சர்வ்” வழங்கும் வீட்டுத் தணிக்கை (Home Audit) மூலம் உங்கள் வீடு, முதியோர்களுக்குப் பாதுகாப்பாக உள்ளதா என்று உறுதி செய்து கொள்ளவும். மேலும் வீட்டிலேயே முதியோர் பராமரிப்பாளர் (Care taker) ஒருவரும், அவர் மூலம் முதலுதவியும் கிடைக்க எளிதாக வழி செய்து கொள்ளுங்கள்.
 
எமது பராமரிப்பாளர்கள் எத்தகைய சூழ்நிலையையும் திறம்படக் கையாள நல்ல பயிற்சி
பெற்றவர்கள். உங்கள் இல்லம், முதியோர்கள் கவலையின்றி வாழக்கூடிய ஒரு சொர்க்கம்
போல் இருப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்.