வியாழன், 29 பிப்ரவரி 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. நட்சத்திர பேட்டி
Written By papiksha joseph
Last Updated : வியாழன், 1 ஜூன் 2023 (10:38 IST)

அதை பற்றி நான் பேச விரும்பவில்லை - காதல் குறித்த கேள்விக்கு கடுப்பான சித்தார்த்!

இந்தி சினிமாவில் அறிமுகமாகி பல்வேறு மொழி படங்களிலும் பிசியாக நடித்து வருபவர் அதிதி ராவ். தமிழில் காற்று வெளியிடை, ஹே சினாமிகா உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள இவருக்கு அனைத்து மொழிகளிலும் ரசிகர்கள் உள்ளனர். 
 
சமீப காலமாக அதிதி ராவ் ஹைதாரியும், பிரபல தமிழ் நடிகர் சித்தார்த்தும் காதலித்து வருவதாக சினிமா வட்டாரங்களில் பேசப்பட்டு வந்தது. அத்தனை வெளிப்படையாக இருவரும் ஒப்புக்கொள்ளவில்லை என்றாலும் ஜோடியாக நடனமாடுவது, அவுட்ங் செல்வது உள்ளிட்ட வீடியோக்களை அவர்களாகவே வெளியிட்டு மறைமுகமாக காதலை ஒப்புக்கொண்டுள்ளனர். 
 
அந்தவகையில் தற்போது திரைப்பட நிகழ்ச்சி ஒன்றில் சித்தார்த்திடம், நீங்கள் உண்மையிலே காதலிக்கிறீங்களா? இல்லையா? என கேட்டதற்கு. நான் படத்தின் ப்ரோமோஷனுக்காக இங்கு வந்துள்ளேன். எனவே அதை பற்றி மட்டும் கேளுங்கள். அப்படி உங்களுக்கு தெரிந்துகொள்ள ஆர்வம் இருந்தால் தனியாக வந்து என்னை சந்தியுங்கள் என கூறினார்.