1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: திங்கள், 17 ஏப்ரல் 2023 (15:40 IST)

சித்தாத்தின் புதிய பட போஸ்டரை வெளியிடும் கமல்ஹாசன்!

பாய்ஸ் என்ற திரைப்படத்தில் அறிமுகமாகி அதன்பின்னர் தமிழ் தெலுங்கு இந்தி உள்பட பல திரைப்படங்களில் நடித்தவர் நடிகர் சித்தார்த். அடுத்து மணிரத்னம் இயக்கிய ஆயுத எழுத்து படத்திலும் நடித்தார். ஆனால் அதன் பின்னர் சொல்லிக்கொள்ளும்படியான வெற்றிகள் அவருக்குக் கிடைக்கவில்லை. கடந்த சில வருடங்களாக சித்தார்த் நடித்த படங்கள் வெற்றி பெறாத நிலையில் இப்போது இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் ஏற்கனவே சித்தார்த் நடித்து முடித்து ரிலீஸ் ஆகாமல் இருக்கும் படத்தை இப்போது ரிலீஸ் செய்யும் வேலைகளில் இறங்கியுள்ளார். அதன் ஒரு கட்டமாக இன்று அவரின் பிறந்தநாளை முன்னிட்டு அந்த படத்தின் முதல் லுக் போஸ்டரை கமல்ஹாசன் வெளியிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.