வியாழன், 29 பிப்ரவரி 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: செவ்வாய், 28 பிப்ரவரி 2023 (09:27 IST)

காதலர் சித்தார்த் உடன் இணைந்து பாடலுக்கு ஆடிய அதிதி ராவ்!

இந்தி சினிமாவில் அறிமுகமாகி பல்வேறு மொழி படங்களிலும் பிசியாக நடித்து வருபவர் அதிதி ராவ். தமிழில் காற்று வெளியிடை, ஹே சினாமிகா உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள இவருக்கு அனைத்து மொழிகளிலும் ரசிகர்கள் உள்ளனர். சமீப காலமாக அதிதி ராவ் ஹைதாரியும், பிரபல தமிழ் நடிகர் சித்தார்த்தும் காதலித்து வருவதாக சினிமா வட்டாரங்களில் பேசப்பட்டு வந்தது. இந்நிலையில் தற்போது சித்தார்த் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ள புகைப்படம் வைரலாகியுள்ளது. ஆனால் காதலை இதுவரை இருவருமே வெளிப்படையாக அறிவிக்கவில்லை.

இந்நிலையில் எனிமி படத்தில் இடம்பெற்ற மால டும் டும் பாடலுக்கு இன்ஸ்டாவில் இருவரும் இணைந்து ஆடும் வீடியோவை அதிதி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதனால் இருவரும் விரைவில் திருமணம் செய்துகொள்ள உள்ளதாக ரசிகர்கள் இடையே கருத்துகள் எழுந்துள்ளன.