திங்கள், 2 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. நட்சத்திர பேட்டி
Written By Papiksha Joseph
Last Updated : சனி, 27 மார்ச் 2021 (15:45 IST)

எனக்கு இன்னும் 5 புள்ளைங்க பெத்துக்கணும் - மனம் திறந்த செல்வராகவன்!

இன்றைய இளம் இயக்குனர்களில் முக்கியமான திரைப்படங்களை மிக் இளம்வயதிலேயே இயக்கி முன்னணி இயக்குனர்களாலேயே பாரட்டப்படுபவர் செல்வராகவன். அது மட்டுமில்லாமல் தன்னுடைய தம்பியை ஒரு முன்னணி ஹீரோவாகவும் உருவாக்கியுள்ளார். இவருக்கு நடிகை சோனியா அகர்வாலுடன் திருமணம் நடந்து பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்தனர்.
 
அதையடுத்து தன்னுடைய உதவியாளராக கீதாஞ்சலியை செல்வராகவன் திருமணம் செய்துக்கொண்டார். அவர்களுக்கு ஏற்கனவே லீலாவதி மற்றும் ஓம்கர் என்ற இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். அண்மையில் தான் ரிஷிகேஷ் என்கிற மகன் பிறந்தார். 
 
இந்நிலையில் பிரபல யூடுயூப் சேனல் ஒன்றில் பாக்யராஜ் செல்வராகவனின் திரைப்பயணம் மற்றும் குடும்ப வாழ்க்கை குறித்து பேட்டி எடுத்திருந்தார். அப்போது தனக்கு நிறைய குழந்தைகள் பெற்றுக்கொள்வதில் அதிக ஆசை உண்டு என கூறிய செல்வராகவன் இன்னும் 5 குழந்தைகள் வேணும் ஆனால், என் பொண்டாட்டி தான் போதும்னு சொல்லி அடிச்சுட்டா என நகைப்புடன் கூறினார்.