1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வியாழன், 25 மார்ச் 2021 (13:17 IST)

நெஞ்சம் மறப்பதில்லை படத்தில் நடிக்க இருந்து தப்பித்த நடிகர்!

நெஞ்சம் மறப்பதில்லை படத்தில் முதலில் நடிக்க இருந்தது தனுஷ்தானாம்.

செல்வராகவன் இயக்கிய ‘நெஞ்சம் மறப்பதில்லை’ படத்தில் எஸ்.ஜே.சூர்யா, நந்திதா ஸ்வேதா, ரெஜினா உள்ளிட்டவர்கள் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். இயக்குநர் கெளதம் மேனன் மற்றும் எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட் மதன் இருவரும் இணைந்து இந்தப் படத்தைத் தயாரித்துள்ளனர். கௌதம் மேனனுக்கு ஏற்பட்ட பொருளாதார சிக்கல்களால் முடங்கிய பல படங்களில் இந்த படமும் ஒன்றாக அமைந்தது. அதன் பிறகு செல்வராகவன் இயக்கிய என் ஜி கே படம் ரிலீஸாகி படுதோல்வி அடைந்தது.

இந்நிலையில் எல்லாப் பிரச்சனைகளும் முடிந்து படம் இன்று உலகமெங்கும் 400 திரையரங்குகளுக்கு மேல் ரிலிஸானது. படம் படு மொக்கையாக இருப்பதாக சொல்லப்பட்டது. ஆனாலும் செல்வராகவன் மற்றும் எஸ் ஜே சூர்யா ஆகியவர்களுக்காக ஓரளவு கூட்டம் கூடியது. இந்நிலையில் இந்த படத்தில் எஸ் ஜே சூர்யாவுக்குப் பதில் முதலில் நடிக்க இருந்தவர் செல்வராகவனின் தம்பி தனுஷ்தானாம். ஆனால் சில காரணங்களால் அவர் நடிக்க முடியாமல் எஸ் ஜே சூர்யாவிடம் அந்த கதை சென்றதாம்.