திங்கள், 6 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: திங்கள், 22 மார்ச் 2021 (12:22 IST)

மொக்கையா இருந்தாலும் தயாரிப்பாளரைக் காப்பற்றிய நெஞ்சம் மறப்பதில்லை!

செல்வராகவன் இயக்கிய ‘நெஞ்சம் மறப்பதில்லை’ படத்தில் எஸ்.ஜே.சூர்யா, நந்திதா ஸ்வேதா, ரெஜினா உள்ளிட்டவர்கள் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். இயக்குநர் கெளதம் மேனன் மற்றும் எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட் மதன் இருவரும் இணைந்து இந்தப் படத்தைத் தயாரித்துள்ளனர். கௌதம் மேனனுக்கு ஏற்பட்ட பொருளாதார சிக்கல்களால் முடங்கிய பல படங்களில் இந்த படமும் ஒன்றாக அமைந்தது. அதன் பிறகு செல்வராகவன் இயக்கிய என் ஜி கே படம் ரிலீஸாகி படுதோல்வி அடைந்தது.

இந்நிலையில் எல்லாப் பிரச்சனைகளும் முடிந்து படம் இன்று உலகமெங்கும் 400 திரையரங்குகளுக்கு மேல் ரிலிஸானது. படம் படு மொக்கையாக இருந்தாலும் செல்வராகவன்  மற்றும் எஸ் ஜே சூர்யா நடிப்புக்காக திரையரங்கில் நல்ல ஓபனிங் கிடைத்தது. மேலும் டிஜிட்டல் மற்றும் தொலைக்காட்சி உரிமையும் நல்ல விலைக்கு விற்கப்பட்டது. இதனால் இந்த படத்தின் மூலம் 1.5 கோடி ரூபாய் வரை தயாரிப்பாளர் மதன் லாபம் அடைந்ததாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் இந்த படத்தை ரிலீஸ் செய்ததன் மூலம் கடுமையான நிதி நெருக்கடியில் இருந்த அவர் சுமார் 6 கோடி வரை கடனை அடைத்துள்ளாராம்.