செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Siva
Last Updated : புதன், 24 ஜனவரி 2024 (07:31 IST)

இந்த ஆண்டுக்கான மகளிர் பிரீமியர் லீக் ஆரம்பமாகும் தேதி அறிவிப்பு.. முதல் போட்டியில் மும்பை - டெல்லி

கடந்த ஆண்டு முதல் மகளிர் ஐபிஎல் போட்டிகள் தொடங்கப்பட்ட நிலையில்  மும்பை இந்தியன்ஸ் அணி சாம்பியன் பட்டம் பெற்றது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் இந்த ஆண்டுக்கான மகளிர் ஐபிஎல் போட்டி பிப்ரவரி 23ஆம் தேதி தொடங்க இருப்பதாகவும்  பெங்களூரு, டெல்லி ஆகிய மைதானங்களில் இந்த போட்டி நடைபெற இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
 
முதல் போட்டி மும்பை மற்றும் டெல்லி அணிகளுக்கிடையே பிப்ரவரி 23ஆம் தேதி தொடங்கும் என்றும் கடந்த சீசன் போலவே இந்த சீசனிலும்  புள்ளி பட்டியலில் முதல் இடத்தை பிடிக்கும் அணி நேரடியாக இறுதிப் போட்டிக்கும் இரண்டாவது மற்றும் மூன்றாவது இடம் பிடிக்கும் அணிகள் எலிமினேட்டர் போட்டியின் மூலம் இறுதிப் போட்டிக்கு தேர்வு செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
பிப்ரவரி 23ஆம் தேதி முதல் மார்ச் 17ஆம் தேதி வரை மகளிர் ஐபிஎல் தொடர் நடைபெறும் என்றும் மார்ச் 15ஆம் தேதி எலிமினேட்டர் போட்டி, மார்ச் 17ஆம் தேதி இறுதி போட்டி நடைபெறும் என்றும் எலிமினேட்டர் மற்றும் இறுதிப் போட்டி டெல்லியில் நடைபெறும் என்றும் ஐபிஎல் நிர்வாகம் தெரிவித்துள்ளது
 
Edited by Siva