1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Updated : திங்கள், 22 ஜனவரி 2024 (18:01 IST)

மாரத்தான் போட்டியில் பங்கேற்ற 2 பேர் உயிரிழப்பு

marathon
மராட்டிய மாநிலம் மும்பையில் நேற்று மாரத்தான் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த மாரத்தன் போட்டியில் பலர் கலந்துகொண்டனர்.

அம்மாநிலத்தின் சத்ரபதி சிவாஜி ரயில் நிலையத்தில் துவங்கி, 42 கிமீட்டர் வரை மாரத்தான் ஓட்டம் நடைபெற்றது.

இப்போட்டியில் பங்கேற்க குறைந்தபட்ச வயது 18 என நிர்ணயிக்கப்பட்ட நிலையில், பலர் ஆர்வமுடன் கலந்துகொண்டனர்.

இந்த நிலையில், இப்போட்டியில் பங்கேற்ற  2 பேர் மயங்கி விழுந்து உயிரிழந்தனர்.

அதாவது கொல்கத்தாவைச் சேர்ந்த ஐடிஊழியர் ஸர்தீப் பானர்ஜி(40 வயது), மாரத்தானில் கலந்துகொண்டார்.  ஹஜி அலி ஜங்சன் அருகே ஓடிக் கொண்டிருக்கும்போது அவர் மயங்கி விழுந்தார். அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில், அவரை பரிசோதித்த மருத்துவர் அவர் உயிரிழந்துவிட்டதாக கூறிவிட்டனர்.

அதேபோல், மும்பையைச் சேர்ந்த ராஜேந்திர போரா(74) என்ற முதியவரும் மாரத்தானில் பங்கேற்றார். அவர் மெரின் டிரைவ் பகுதியில் ஓடிக் கொண்டிருந்தபோது, மயங்கி விழுந்தார். அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதனை செய்த மருத்துவர் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். இப்போட்டியில் பங்கேற்ற 22 பேர் மூச்சுத் திணறால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல் வெளியாகிறது.

இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.