நமக்கு சூப்பர் ஸ்டார்கள் தேவையில்லை… அவர்கள் வீட்டிலேயே இருந்து கொள்ளட்டும் – ஹர்பஜன் சிங் காட்டம்!
இந்திய கிரிக்கெட் அணியின் வெற்றிகரமான சுழற்பந்து வீச்சாளராக வலம் வந்தவர் ஹர்பஜன் சிங். ஆனால் அவரின் கடைசி ஆண்டுகளில் அவருக்கு அணியில் சரியான இடம் கிடைக்கவில்லை. அதனால் ஐபிஎல் மற்றும் உள்ளூர் தொடர்களில் அவர் விளையாடி வந்தார். அதன் பின்னர் அவர் தன்னுடைய ஓய்வை அறிவித்து தற்போது கிரிக்கெட் விமர்சகராகவும், வர்ணனையாளராகவும் பங்காற்றி வருகிறார்.
அவர் மற்ற வீரர்களைப் போல அல்லாது கடுமையான விமர்சனங்களையும் இந்திய அணி மேல் வைத்து வருகிறார். அந்த வகையில் இப்போது பார்டர் கவாஸ்கர் கோப்பையை இழந்துள்ள இந்திய அணியை கடுமையாக விமர்சித்துள்ளார்.
அதில் “நமக்கு அணியில் சூப்பர் ஸ்டார்கள் தேவையில்லை. சூப்பர் ஸ்டார் ஆகவேண்டும் என விரும்புவர்கள் வீட்டில் இருந்தே கிரிக்கெட் விளையாடிக் கொள்ளட்டும். சிறந்த வீரர்களால் மட்டுமே அணி முன்னேறும். இந்திய அணிக்குள் சூப்பர் ஸ்டார் கலாச்சாரம் ஒழிய வேண்டும்” எனக் கூறியுள்ளார்.