வியாழன், 9 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated : திங்கள், 30 நவம்பர் 2020 (10:00 IST)

என்னைக் காதலிப்பதாக சொல்லி ஏமாற்றிவிட்டார்? பாகிஸ்தான் கேப்டன் மீது பெண் புகார்!

பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் ஆசம் ஒரு பெண்ணை கர்ப்பமாக்கி ஏமாற்றிவிட்டதாக புகார் எழுந்துள்ளது.

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் இளம் வீரரான பாபர் ஆஸம் பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். அதலபாதாளத்தில் இருக்கும் அணியின் நிலைமையை அவர் மீட்டெடுப்பார் என்ற நம்பிக்கை ரசிகர்கள் மத்தியில் உள்ளது. இப்போது தன் தலைமையில் பாகிஸ்தான் அணியை அவர் நியுசிலாந்துக்கு அழைத்துச் சென்றுள்ளார்.

இந்நிலையில் அவர் மீது ஒரு பெண் பாலியல் புகார் கொடுத்துள்ளார். பள்ளியில் இருந்தே இருவரும் ஒன்றாக படித்ததாகவும் பாபர் கிரிக்கெட் வீரராக ஆவதற்கு முன்பே அவரை தனக்கு தெரியும் என்றும் கூறியுள்ளார். 2010 ஆம் ஆண்டு பாபர் காதலை வெளிப்படுத்தியதாகவும், தன்னிடம் உடலுறவு கொண்டு தான் கர்ப்பமானது தெரிந்ததும் தன்னை அடித்து துன்புறுத்தியதாகவும் தெரிவித்துள்ளார். இந்த குற்றச்சாட்டு பாகிஸ்தானில் மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.